அக்சருக்கு ஓவர் கொடுக்காதது ஏன்...? - டேவிட் வார்னர் விளக்கம்


அக்சருக்கு ஓவர் கொடுக்காதது ஏன்...? - டேவிட் வார்னர் விளக்கம்
x

Image Courtesy: AFP 

குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அக்சர் படேல் ஒரு ஓவர் கூட பந்துவீசவில்லை.

டெல்லி,

ஐபிஎல் தொடரின் நேற்று டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் வார்னர் 37 ரன், அக்சர் 36 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தமிழக வீரர் சாய் சுதர்சனின் அரைசதத்தின் (62 ரன்) உதவியுடன் 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தனது 2வது வெற்றியை பதிசு செய்தது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி பந்து வீசும் போது அந்த அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் அக்சர் படேலுக்கு அவர் ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை.

இது ஏன் என் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், அக்சருக்கு ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பு கொடுக்காதது ஏன் என டெல்லி கேப்டன் வார்னர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பிட்ச்சில் ஸ்விங் இருக்கும் என்பது எதிர்பார்த்தது தான். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக பந்து ஸ்விங்கானது. ஆனால் பிட்ச்சின் இன்னொரு பக்கத்தில் ஸ்விங் அந்த அளவிற்கு ஆகவில்லை. ஒரு மைதானத்தின் சூழலுக்கு தகுந்தாற்படி எப்படி விளையாட வேண்டும் என்பதை குஜராத் அணி செய்து காட்டி இருக்கிறது.

இதே மைதானத்தில் இன்னும் 6 போட்டிகளில் விளையாட உள்ளோம். சாய் சுதர்சன் தொடக்கம் முதலே சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார். குறைந்தது டெல்லி மைதானத்தில் 180 முதல் 190 ஆட்டங்கள் வரை எடுக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் நீண்ட ஆண்டுகளாக அக்சர் படேல் பந்து வீசி வருகிறார்.

இந்தியாவின் பிரதான சுழற்பந்து வீச்சாளர். அவர் பந்து வீசாததற்கு பிட்ச் மற்றும் விக்கெட் தான் காரணம். மற்றபடி அவருக்கு காயம் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.



Related Tags :
Next Story