பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா பெங்களூரு...கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத்துடன் மோதல்...!


பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா பெங்களூரு...கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத்துடன் மோதல்...!
x

Image Courtesy: virat.kohli

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் ஆர்சிபி ஆட உள்ளது.

பெங்களூரு,

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடரின் கடைசி லீக் போட்டியாக அமைந்த இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் பெங்களூரு ஆட உள்ளது.

பெங்களூரு அணி 13 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 702 ரன்கள் அடித்து இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேவேளையில் விராட் கோலி 538 ரன்கள் சேர்த்து 5-வது இடத்தில் இருக்கிறார். இவர்கள் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம்.

கிளென் மேக்ஸ்வெல்லும் குஜராத் பந்து வீச்சாளர்களுக்கு சவால்தரக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரையில் முகமது சிராஜ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வெய்ன் பார்னலும் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார்.

குஜராத் அணி 18 புள்ளிகளுடன் ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று அதே வேட்கையுடன் அடுத்த சுற்றுக்கு செல்லும் முனைப்பில் குஜராத் ஆட உள்ளது.


Next Story