பெண்கள் பிரிமீயர் லீக் - தோல்வியில் இருந்து மீளுமா பெங்களூரு ? உ.பி. வாரியர்ஸ் அணியுடன் இன்று மோதல்


பெண்கள் பிரிமீயர் லீக் - தோல்வியில் இருந்து மீளுமா பெங்களூரு  ? உ.பி. வாரியர்ஸ் அணியுடன்  இன்று மோதல்
x

பெங்களூரு முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை,

முதலாவது மகளிர் பிரிமீயர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள பிரா போர்ன், நவி மும்பையில் இருக்கும் டி.ஒய்.பட்டேல் ஆகிய 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது.

13-வது 'லீக்' ஆட்டம் டி.ஒய்.பட்டேல் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் அலிசா ஹீலி தலைமையிலான உ.பி. வாரியர்ஸ்-ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணிகள் மோதுகின்றன. உ.பி.அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது.

பெங்களூரு அணி தான் மோதிய 5 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.

தோல்விப் பாதையில் இருந்து மீண்டு உ.பி. அணிக்கு பதிலடி கொடுத்து பெங்களூரு முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story