பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுவாரா ? - சி.எஸ்.கே. சிஇஓ தகவல்...


பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி  விளையாடுவாரா ? -  சி.எஸ்.கே. சிஇஓ தகவல்...
x

தோனி அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்விக்கு சென்னை அணி சிஇஓ காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணி அடுத்த போட்டியில் 17 ஆம் தேதி பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

இந்த நிலையில் சென்னை அணியில் 5 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.பென் ஸ்டோக்ஸ் , தீபக் சாஹர் ஆகியோர் காயம் ஏற்பட்டு போட்டிகளில் விளையாடாத நிலையில் , தற்போது கேப்டன் தோனி, சிசண்டா மகலா , சிமர்ஜீத் சிங் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர் . சென்னை அணியின் முக்கிய வீரர்கள் காயம் அடைந்திருப்பது சென்னை ரசிகர்களிடையியே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தோனி அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்விக்கு சென்னை அணி சிஇஓ காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ,

அவருக்கு முழங்காலில் காயம் இருப்பது உண்மை தான். ஆனாலும் அவர் தொடர்ந்து விளையாடுவார்" என

தெரிவித்துள்ளார்.

மேலும் பென் ஸ்டோக்ஸ் காயம் குறித்து கூறுகையில் ,

"ஸ்டோக்ஸ் வேகமாக குணமடைந்து வருகிறார், ஏப்ரல் 30 ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக உடல் தகுதியுடன் இருப்பார் என தெரிவித்தார்.


Next Story