`ஹாட்ரிக்' வெற்றி பெறுமா இந்தியா ? அமெரிக்காவுடன் நாளை மோதல்


`ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா ? அமெரிக்காவுடன் நாளை மோதல்
x

இந்திய அணி 3-வது ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவை நாளை (12-ந் தேதி) எதிர்கொள்கிறது.

நியூயார்க்,

டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்னில் வென்றது.இந்திய அணி 3-வது ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவை நாளை (12-ந் தேதி) எதிர்கொள்கிறது. இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவு ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.இந்திய அணி அமெரிக்காவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர்-8 சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

இந்தியாவை போலவே மோனக் படேல் தலைமையிலான அமெரிக்க அணியும் முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளது. கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை சூப்பர் ஓவரிலும் வீழ்த்தி இருந்தது.இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து அமெரிக்கா விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story