தொடரை வெல்லுமா இந்தியா..? இலங்கையுடன் 2வது டி20 போட்டியில் இன்று மோதல்
இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான 2வது டி20 போட்டி புனே மைதானத்தில் இன்றிரவு நடைபெறுகிறது.
புனே,
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று புனே மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் இந்திய அணி உள்ளது. முதல் போட்டி தோல்விக்கு இலங்கை அணி பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.
வெற்றிக்காக இரு அணிகளும் வரிந்துகட்டும் என்பதால், இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
Related Tags :
Next Story