தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர்: விராட் கோலி விலகல்?


தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர்: விராட் கோலி விலகல்?
x

Image : PTI 

தினத்தந்தி 29 Nov 2023 10:02 AM GMT (Updated: 29 Nov 2023 10:38 AM GMT)

உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றார்.

புதுடெல்லி,

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நிறைவடைந்தவுடன், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உலகக்கோப்பையில் பங்கேற்ற பெரும்பாலான இந்திய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

இந்த தொடர் முடிவடைந்தவுடன் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்தியா விளையாட இருக்கிறது.

இந்த தொடர் டிசம்பர் 10-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து பிசிசிஐயிடம் விராட் கோலி ஓய்வு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story