நம்பர் 17 ஆர்சிபி ஜெர்சியை வேறொரு வீரருக்கு வழங்குவீர்களா..? - டிவில்லியர்ஸ் அளித்த பதில்..!


நம்பர் 17 ஆர்சிபி ஜெர்சியை வேறொரு வீரருக்கு வழங்குவீர்களா..? - டிவில்லியர்ஸ் அளித்த பதில்..!
x

ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக பல்வேறு ஆட்டங்களில் அபாரமாக ஆடி டிவில்லியர்ஸ் வெற்றிகளை தேடி தந்துள்ளார்.

பெங்களூரு,

10 அணிக்ள் பங்கேற்றுள்ள 16வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்றைய நிலவரப்படி ராஜஸ்தான், லக்னோ, சென்னை, குஜராத், பஞ்சாப் அணிகள் புள்ளிபட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளன. முன்னாள் சாமியனான மும்பை அணி நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 6வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி கடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணியிடம் போராடி வீழ்ந்தது. பெங்களூரு அணி இந்த முறையாவது கோப்பையை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பெங்களூரு அணிக்காக கடந்த காலங்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, பல ஆட்டங்களில் பெங்களூருவை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் டி வில்லியர்ஸ் இடம் தாங்கள் பயன்படுத்திய எண்:17 கொண்ட ஜெர்ஜியை யாருக்கு கொடுப்பீர்கள் என நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த டிவில்லியர்ஸ்,

இது ஒரு கடினமான கேள்வி. அது ஒரு வேளை ரஜத் படித்தராக இருக்கலாம். தி படா மேன். நான் அவருக்கு அந்த பெயரை வைத்தேன். எதிர்காலத்தில் பெங்களூரு அணிக்காக அவர் ஒரு வலிமையான வீரராக இருப்பார். நான் ஜெர்ஜியை அந்த இளைஞருக்கு கொடுக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரஜத் படித்தார் கடந்த ஐபிஎல் சீசனில் எல்லிமினேட்டர் சுற்றில் லக்னோ அணிக்கு எதிராக அதிரடியாக ஆடி சதம் அடித்து அசத்தினார். ரஜத் படித்தார் காயம் காரணமாக இந்த வருட ஐபிஎல் சீசனில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story