பெண்களுக்கான 20-ஓவர் கிரிக்கெட் தரவரிசை: ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்துக்கு முன்னேற்றம்


பெண்களுக்கான 20-ஓவர் கிரிக்கெட் தரவரிசை: ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்துக்கு முன்னேற்றம்
x

பெண்களுக்கான 20-ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

துபாய்,

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்டர்களின் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா (705 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

காமன்வெல்த் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. அவரது சிறந்த தரநிலை இதுவாகும். ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் (733 புள்ளி) முதலிடத்திலும், பெத் மூனி (707 புள்ளி) 2-வது இடத்திலும் உள்ளனர்.


Next Story