மகளிர் ஒருநாள் தரவரிசை; பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முன்னேற்றம் கண்ட ஆஸ்திரேலிய வீராங்கனைகள்


மகளிர் ஒருநாள் தரவரிசை; பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முன்னேற்றம் கண்ட ஆஸ்திரேலிய வீராங்கனைகள்
x

Image Courtesy: @ICC

தினத்தந்தி 26 March 2024 1:10 PM GMT (Updated: 26 March 2024 1:11 PM GMT)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மகளிருக்கான ஒருநாள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மகளிருக்கான ஒருநாள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சமீபத்தில் வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

அதன்படி ஒருநாள் தரவரிசையில் பேட்டிங் பட்டியலில் இங்கிலாந்தின் நேட் ஸ்கிவர் பிரண்ட் (807 புள்ளி) முதல் இடத்திலும், இலங்கையின் சமாரி அத்தபட்டு (736 புள்ளி) 2ம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி (699 புள்ளி) 3ம் இடத்திலும், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (696 புள்ளி) 4ம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் (685 புள்ளி) 5ம் இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் தரவரிசையில் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (746 புள்ளி), ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் ஒரு இடம் ஏற்றம் கண்டு (689 புள்ளி) 2ம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் மரிசேன் கேப் (677 புள்ளி) 3ம் இடத்திலும், இந்தியாவின் தீப்தி (654 புள்ளி) 4ம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் 2 இடம் ஏற்றம் கண்டு (634 புள்ளி) 5ம் இடத்திலும் உள்ளனர்.



Next Story