பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்: நோ-பால், வைடுக்கு டி.ஆர்.எஸ். முறை


பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்: நோ-பால், வைடுக்கு டி.ஆர்.எஸ். முறை
x

Image Courtesy : @wplt20 twitter

20 ஓவர் வடிவிலான லீக் கிரிக்கெட்டில் முதல் முறையாக வைடு, நோ-பாலுக்கு டி.ஆர்.எஸ். பயன்படுத்தப்படுகிறது.

மும்பை,

பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் நடுவர் வழங்கும் வைடு, நோ-பால் தொடர்பான தீர்ப்பில் ஆட்சேபனை இருந்தால் அதை எதிர்த்து டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய டெல்லி-பெங்களூரு இடையிலான ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்கட் இடுப்பு உயரம் அளவுக்கு வீசிய பந்துக்கு டெல்லி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் டி.ஆர்.எஸ்.-ன்படி நோ-பால் கேட்டு அப்பீல் செய்ததை பார்க்க முடிந்தது.

ரீப்ளேவுக்கு பிறகு அது நோ-பால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதே போல் இரவில் நடந்த உ.பி. வாரியர்ஸ்- குஜராத் இடையிலான ஆட்டத்தில் கடைசி ஓவரில் இரண்டு முறை வைடுக்கு டி.ஆர்.எஸ். கேட்கப்பட்டது. 20 ஓவர் வடிவிலான லீக் கிரிக்கெட்டில் வைடு, நோ-பாலுக்கு டி.ஆர்.எஸ். பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.


Next Story