பெண்கள் பிரிமீயர் லீக்: டெல்லி அணிக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத்
148 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.
மும்பை,
முதலாவது மகளிர் பிரிமீயர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள பிரா போர்ன், நவி மும்பையில் இருக்கும் டி.ஒய்.பட்டேல் ஆகிய 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 14-வது 'லீக்' ஆட்டம் மும்பையில் உள்ள பிரா போர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இதில் டெல்லி - குஜராத் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார் .அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது . அந்த அணியில் சிறப்பாக விளையாடிய லாரா வல்வார்ட் 57 ரன்களும் , ஆஷ்லே கார்ட்னர் 51 ரன்களும் எடுத்தனர்.
டெல்லி அணியில் ஜெஸ் ஜோனாசென் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 148 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.