பெண்கள் பிரிமீயர் லீக்: குஜராத் அணிக்கு 163ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை..!
சிறப்பாக விளையாடிய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 51 ரன்கள், யாஸ்திகா 44ரன்கள் , எடுத்தனர்.
மும்பை,
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியட்ஸ், குஜராத் ஜெய்ண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன.
இந்நிலையில் இந்த தொடரின் இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் இதுவரை தோல்வியை சந்திக்காத மும்பை அணியும், குஜராத் அணியும் மோதுகின்றன . டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8விக்கெட் இழப்பிற்கு 162ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 51 ரன்கள், யாஸ்திகா 44ரன்கள் , எடுத்தனர்.
தொடர்ந்து 163 ரன்கள் இலக்குடன் குஜராத் அணி விளையாடி வருகிறது.
Related Tags :
Next Story