மகளிர் டி20 உலக கோப்பை- பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா விலகல்
இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, கைவிரல் காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
கேப்டவுன் ,
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நாளை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதற்காக இந்திய வீராங்கனைகள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, கைவிரல் காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், பீல்டிங் செய்தபோது ஸ்மிருதி மந்தனாவின் கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் வங்காளதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது காயம் குணமடையாததால், பாகிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டியிலும் அவர் பங்கேற்கமாட்டார்.மந்தனா நாளைய போட்டியில் விளையாடாதது அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
Related Tags :
Next Story