உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக நெதர்லாந்து அணியில் மாற்றம்!
உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.
பெங்களூரு,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
இதில் நடைபெற உள்ள லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக நெதர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரியான் க்ளீன் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நோவா குரோஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக 15 வீரர்கள் கொண்ட நெதர்லாந்து அணியின் விவரம் பின்வருமாறு;-
நெதர்லாந்து அணி: ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ டவுட், பாஸ் டி லீடே, விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, பால் வான் மீகெரென், காலின் அக்கர்மேன், ரோலோப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், நோவா குரோஸ், வெஸ்லி பர்ரேசி, சுல்பிகார், ஷாரிஸ் அஹ்மத், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.