உலகக்கோப்பை கிரிக்கெட்; நெதர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு...!


உலகக்கோப்பை கிரிக்கெட்; நெதர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு...!
x

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

தர்மசாலா,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இதில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடுவதில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டது. தற்போது மழை நின்ற பின்னர் டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.


Next Story