உலகக்கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு!


உலகக்கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு!
x

image courtesy; twitter/ @ICC

தினத்தந்தி 16 Nov 2023 1:42 PM IST (Updated: 16 Nov 2023 4:09 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலிய அணியில் கடந்த ஆட்டத்தில் களம் இறங்காத ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் அணிக்கு திரும்பியுள்ளனர்.

கொல்கத்தா,

இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3-ம் இடங்களை பிடித்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச உள்ளது. ஆஸ்திரேலிய அணியில் கடந்த ஆட்டத்தில் களம் இறங்காத ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் அணிக்கு திரும்பியுள்ளனர்.


Next Story