உலகக்கோப்பை கிரிக்கெட்; கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை


உலகக்கோப்பை கிரிக்கெட்; கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை
x
தினத்தந்தி 5 Sept 2023 11:30 AM IST (Updated: 5 Sept 2023 11:33 AM IST)
t-max-icont-min-icon

உலகக்கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.

சென்னை,

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அக்டோபர் 8-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

இதில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் 'புக் மை ஷோ' இணையதளம் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் நடைபெற உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கான டிக்கெட்டுகள் ரூ. 66 ஆயிரம் முதல் ரூ.1லட்சத்து 66 ஆயிரம் வரை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்கப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் பல மணி நேரம் காத்திருந்து வெறும் 2 டிக்கெட் மட்டுமே வாங்குவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கீகரிக்கப்படாத இணையதளத்தில் ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது..


Next Story