சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்ட உலகக்கோப்பை..!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணிகளும் உலகக்கோப்பை தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.
இதனை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு உலகக்கோப்பை சுற்றுப்பயணமாக கொண்டு செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.இந்த நிலையில் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 8-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.