உலக கோப்பை தகுதி சுற்று இறுதிப் போட்டி : இலங்கை-நெதர்லாந்து அணிகள் நாளை மோதல்
இலங்கை-நெதர்லாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டி ஹராரேயில் நாளை நடக்கிறது.
ஹராரே,
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன.
8 நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன. 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இலங்கை, நெதர்லாந்து அணிகள் முதல் 2 இடங்களை பிடித்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. 2 முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதல் முறையாக தகுதி பெறவில்லை. இதேபோல் ஜிம்பாப்வே அணியும் தகுதி பெறவில்லை.
இந்த நிலையில் இலங்கை-நெதர்லாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டி ஹராரேயில் நாளை நடக்கிறது.
Related Tags :
Next Story