உலகக்கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது


உலகக்கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 8 Oct 2023 2:46 AM GMT (Updated: 8 Oct 2023 5:58 AM GMT)

உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

அகமதாபாத்,

ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதன் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்தை தொடர்ந்து, இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் வருகிற 14-ந்தேதி மோதுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்டமானது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்து உள்ளது.


Next Story