உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்...!


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்...!
x

Image Courtesy : PTI

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.

மும்பை,

2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 7ம் தேதி முதல் இங்கிலாந்தின் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.

இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும், ஆஸ்திரேலிய அணி பேட் கம்மின்ஸ் தலைமையிலும் களம் இறங்க உள்ளன. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.

இந்திய அணியில் ஸ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட், பும்ரா ஆகிய முன்னணி வீரர்கள் இல்லாதது சற்று பின்னடைவாக கருதப்பட்டாலும், இந்தியாவின் பேட்டிங்கில் ரோகித், கில், கோலி, புஜாரா, ரஹானே ஆகியோர் சற்று ஆறுதல் அளிக்கின்றனர்.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். இதில் தொடக்க 1 முதல் 5 இடங்களில் முறையே ரோகித், கில், புஜாரா, கோலி, ரஹானே ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

6வது இடத்தில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத்தை தேர்வு செய்துள்ள அவர் 7 மற்றும் 8வது இடத்தில் ஜடேஜா மற்றும் அஷ்வினை தேர்வு செய்துள்ளார். மேலும் 9 முதல் 11 இடங்களில் முறையே முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

கவாஸ்கர் தேர்வு செய்துள்ள இந்திய அணி:-

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், செத்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்யா ரஹானே, கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ்.


Next Story