உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை : நியூசிலாந்து அணியை பின்னுக்கு தள்ளிய வெஸ்ட் இண்டீஸ் அணி


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை : நியூசிலாந்து அணியை பின்னுக்கு தள்ளிய வெஸ்ட் இண்டீஸ் அணி
x

Image Courtesy : ICC 

வெஸ்ட் இண்டீஸ் அணி 43.47 சதவீத புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

துபாய்,

வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டிக்கு பிறகான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை (2021- 2023) வெளியாகியுள்ளது. அணிகளின் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் பட்டியலில் இடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43.47 சதவீத புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 7-வது இடத்திலும் மற்றும் இங்கிலாந்து அணி 8-வது இடத்திலும் உள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் 75 சதவீத புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 2-வது இடத்தில் உள்ளது. 58.33 சதவீதத்துடன் இந்திய அணி இந்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

இறுதியில் இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடுவார்கள் . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை மற்றும் சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை வெவ்வேறானது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story