"நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்..மை பாய்" மகன் குறித்து தவான் உருக்கம்


நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்..மை பாய் மகன் குறித்து தவான் உருக்கம்
x

image courtesy: PTI

ஷிகர் தவான், தன்னுடைய மகனுக்காக வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், தற்சமயம் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போராடி வருகிறார். இருப்பினும் ஐ.பி.எல். போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் தற்போது நடைபெற்று வரும் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

இதனையடுத்து இன்று நடைபெற உள்ள 33-வது ஐ.பி.எல். லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்சை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. இவ்வேளையில் ஷிகர் தவான் தனது மகனுக்காக வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் தற்போது தன்னுடன் இல்லாமல் பிரிந்து இருக்கும் தன்னுடைய மகனின் பெயரை பொறித்த ஜெர்சியுடன் இருக்கும் ஷிகர் தவான் அந்த ஜெர்சி அணிந்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு : "நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்.. மை பாய்" என ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story
  • chat