லக்னோ அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்


லக்னோ அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்
x

Image : @mipaltan

லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனிடையே சமீபத்தில் லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்ட மோர்னே மோர்கல் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது லக்னோ அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டது.

இந்நிலையில், லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதில் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story