கால்பந்து தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்


கால்பந்து தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்
x
தினத்தந்தி 23 Dec 2016 12:40 AM IST (Updated: 23 Dec 2016 12:40 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச கால்பந்து சம்மேளனம், அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணி இரண்டு இடங்கள் ஏற்றம் கண்டு, 135–வது இடத்தை பிடித்தது. கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த தரநிலை இதுவாகும். ஜனவரி மாதம் 163–வது இடம் வகித்த இந்திய அணி ஆண்

புதுடெல்லி,

சர்வதேச கால்பந்து சம்மேளனம், அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணி இரண்டு இடங்கள் ஏற்றம் கண்டு, 135–வது இடத்தை பிடித்தது. கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த தரநிலை இதுவாகும். ஜனவரி மாதம் 163–வது இடம் வகித்த இந்திய அணி ஆண்டின் இறுதிக்குள் 28 இடங்கள் முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜென்டினா முதலிடத்திலும், பிரேசில் 2–வது இடத்திலும், உலக சாம்பியன் ஜெர்மனி 3–வது இடத்திலும், சிலி 4–வது இடத்திலும் இருக்கிறது.

1 More update

Next Story