சீனியர் டிவிசன் லீக் கால்பந்து இந்தியன் வங்கி அணி வெற்றி


சீனியர் டிவிசன் லீக் கால்பந்து இந்தியன் வங்கி அணி வெற்றி
x
தினத்தந்தி 9 March 2017 11:00 PM GMT (Updated: 9 March 2017 7:38 PM GMT)

சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி அணி 2–1 என்ற கோல் கணக்கில் சுங்க இலாகா அணியை தோற்கடித்தது. இந்தியன் வங்கி சார்பில் லால்ராம்ஜா 12–வது நிமிடத்திலும், டேவிட் 72–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். சுங்க இலாகா அணி தரப்பில் ஜெபக்குமார் 31–வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். மற்றொரு லீக் ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே அணி 1–0 என்ற கோல் கணக்கில் ஐ.சி.எப். அணியை வீழ்த்தியது. வெற்றிக்கான கோலை ரிஜூ 51–வது நிமிடத்தில் அடித்தார்.


Next Story