சாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரைஇறுதியின் முதல் சுற்றில் யுவென்டஸ் அணி வெற்றி


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரைஇறுதியின் முதல் சுற்றில் யுவென்டஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 5 May 2017 2:30 AM IST (Updated: 5 May 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது.

மொனாக்கோ,

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதன் 2-வது அரைஇறுதியில் முதல் சுற்று ஆட்டத்தில் யுவென்டஸ் (இத்தாலி)-மொனாக்கோ எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் யுவென்டஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொனாக்கோ அணியை வீழ்த்தியது. யுவென்டஸ் அணி தரப்பில் கோன்சலோ ஹிகுவைன் 29-வது மற்றும் 59-வது நிமிடங்களில் கோல் அடித்தார். யுவென்டஸ்-மொனாக்கோ அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டம் துரினில் வருகிற 9-ந் தேதி நடக்கிறது. இதன் முடிவில் கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 
1 More update

Next Story