21 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கால்பந்து அணி தரவரிசையில் 100-வது இடத்துக்கு முன்னேற்றம்


21 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கால்பந்து அணி தரவரிசையில் 100-வது இடத்துக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 4 May 2017 9:30 PM GMT (Updated: 4 May 2017 8:02 PM GMT)

அணிகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) நேற்று வெளியிட்டது.

புதுடெல்லி, 

அணிகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) நேற்று வெளியிட்டது. இதன்படி இந்திய அணி ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 100-வது இடத்தை பிடித்துள்ளது. நிகரகுவா, லிதுவேனியா, எஸ்தோனியா ஆகிய அணிகளுடன் இணைந்து இந்தியா 100-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. கடந்த மாதம் (ஏப்ரல்) வெளியிடப்பட்ட தரவரிசையில் இந்திய அணி அதிரடியாக 72 இடங்கள் ஏற்றம் கண்டு 101-வது இடத்தை பெற்று இருந்தது நினைவிருக்கலாம். கடந்த 21 ஆண்டுகளில் இந்திய அணியின் சிறந்த தரவரிசை இதுவாகும். கடைசியாக 1996-ம் ஆண்டில் இந்திய அணி 100-வது இடத்தை பிடித்து இருந்தது. 1996-ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் இந்திய அணி 94-வது இடத்தை பிடித்தது. இது தான் இந்திய அணியின் சிறந்த நிலையாகும். 

Next Story