மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி தொடங்கியது


மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி தொடங்கியது
x
தினத்தந்தி 26 Aug 2017 10:45 PM GMT (Updated: 26 Aug 2017 8:09 PM GMT)

மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

திருச்சி,

திருச்சி ஜமால் முகமது கல்லூரி நடத்தும் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நேற்று கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. இதில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி, திருப்பத்தூர் தூய இருதய கல்லூரி, பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி உள்பட 12 கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடந்தது. போட்டியை ஜமால் முகமது கல்லூரியின் செயலரும், தாளாளருமான காஜா நஜீமுதின், முதல்வர் இஸ்மாயில் முகைதீன் ஆகியோர் முன்னிலையில், பொருளாளர் கலீல் அகமது, இணை செயலாளர் ஜமால் முகமது ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நேற்று காலை நடந்த முதல் போட்டியில் விளையாடிய உடுமலைப்பேட்டை வித்யாசாகர் கல்லூரி அணி, புதுகை மாமன்னர் அரசு கல்லூரி அணியை 7-6 என்ற கோல் கணக்கில் வென்றது. மற்றொரு போட்டியில் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி அணி, 2-0 என்ற கோல் கணக்கில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணியை தோற்கடித்தது.

போட்டிகள் தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறு கிறது. அன்று மாலையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பரிசுத்தொகை, சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஷாயின் ஷா, உதவி உடற்கல்வி இயக்குனர் பிரதீப் குமார் ஆகியோர் செய்துள்ளனர்.

Next Story