ஐ.எஸ்.எல்.கால்பந்து: ஒடிசா -ஈஸ்ட் பெங்கால் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல்.கால்பந்து: ஒடிசா -ஈஸ்ட் பெங்கால் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 30 Nov 2021 10:06 AM GMT (Updated: 30 Nov 2021 10:06 AM GMT)

ஐ.எஸ்.எல்.கால்பந்து இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஒடிசா - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன

கோவா

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில்  ஒடிசா - ஈஸ்ட் பெங்கால்  அணிகள்  மோதுகின்றன.

ஒடிசா அணி விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5- வது இடத்தில் உள்ளது. ஈஸ்ட் பெங்கால் விளையாடிய 2 போட்டிகளில் 1-ல் வெற்றி,1-ல் டிரா என்று புள்ளி பட்டியலில் 10 - வது இடத்தில்  உள்ளது.  

Next Story