ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் -மும்பை சிட்டி அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் -மும்பை சிட்டி அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 1 Dec 2021 10:13 AM GMT (Updated: 1 Dec 2021 10:13 AM GMT)

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஏ.டி.கே மோகன் பகான் - மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.

கோவா

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில்  ஏ .டி .கே மோகன் பகான்   -  மும்பை சிட்டி அணிகள்  மோதுகின்றன.

மோகன் பகான் அணி விளையாடிய 2 போட்டியில் 2 -ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல்  இடத்தில் உள்ளது. மும்பை சிட்டி விளையாடிய 2 போட்டிகளில் 1-ல் வெற்றி,1-ல் தோல்வி என்று புள்ளி பட்டியலில்  -6-வது இடத்தில்  உள்ளது.  

Next Story