'பிபா'வின் சிறந்த வீராங்கனை விருதை பெற்றார் அலெக்சியா புடெல்லாஸ்


பிபாவின் சிறந்த வீராங்கனை விருதை பெற்றார் அலெக்சியா புடெல்லாஸ்
x

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அலெக்சியா புடெல்லாஸ் ‘பிபா’வின் சிறந்த வீராங்கனை விருதை பெற்றார்.

பாரீஸ்,

சர்வதேச கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை ஆண்டுதோறும் சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) தேர்வு செய்து விருது வழங்கி கவுரவிக்கிறது. சர்வதேச கால்பந்து சங்கத்தின் 211 உறுப்பு நாடுகளை சேர்ந்த அணியின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், அங்கீகாரம் பெற்ற கால்பந்து பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆன்-லைன் மூலம் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் விருதுக்குரியவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில், கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி, சிறந்த வீரர் விருதுக்கு தேர்வானார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் இரவு நடந்த விழாவில் இந்த விருதை மெஸ்சி பெற்றுக்கொண்டார். அவர் 7-வது முறையாக சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றுள்ளார்.

இதேபோல் 'பிபா'வின் சிறந்த வீராங்கனை விருதை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை அலெக்சியா புடெல்லாஸ் பெற்றார். சிறந்த கோல் கீப்பர் விருதை அர்ஜென்டினாவின் எமிலியானோ மார்டினஸ்சும், சிறந்த பெண் கோல்கீப்பர் விருதை இங்கிலாந்தின் மேரி எர்ப்ஸ்சும் பெற்றனர்.


Next Story