ஐ.எஸ்.எல். கால்பந்து தொடருக்கான அட்டவணை வெளியானது

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கிரிக்கெட் போட்டிக்கு ஐ.பி.எல், தொடர் நடத்தப்பட்டு வருவது போலவே, கால்பந்து போட்டிகளுக்காக இந்தியாவில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 12 அணிகள் பங்கேற்க உள்ள 10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.எல். தொடர் வரும் செப்டம்பர் 21-ந் தேதி முதல் டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . முதல் போட்டியில் கேரளா - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.
சென்னையின் எப்.சி.அணி தனது முதல் போட்டியில் வரும் 23 ஆம் தேதி ஒடிசா அணியுடன் மோதுகிறது.இந்த போட்டி மாலை 5.30 மணிக்கு தொடங்க உள்ளது.
More details on this announcement: https://t.co/ycbW6zU7ko
— Indian Super League (@IndSuperLeague) September 7, 2023
Fixtures: https://t.co/9yRIpjYAQ7#ISL #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18






