தனது ஓய்வு முடிவிலிருந்து பின்வாங்குகிறார் அர்ஜெண்டினா கால்பந்தாட்ட வீரர் டி மரியா


தனது ஓய்வு முடிவிலிருந்து பின்வாங்குகிறார் அர்ஜெண்டினா கால்பந்தாட்ட வீரர் டி மரியா
x

உலகக் கோப்பையுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியிருந்தார்.

பியூனஸ் அயர்ஸ்,

சமீபத்தில் கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்தில் மகுடம் சூடிய அர்ஜென்டினா அணியில் 34 வயதான ஏஞ்சல் டி மரியாவும் இடம் பெற்றிருந்தார்.

இறுதி ஆட்டத்தில் அவர் ஒரு கோல் அடித்தார். இந்த உலகக் கோப்பையுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியிருந்தார். இந்த நிலையில் டி மரியா ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

2024-ம் ஆண்டு கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் வரை அவர் தொடர்ந்து விளையாட விரும்புவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் இதுவரை அர்ஜென்டினா அணிக்காக 129 ஆட்டங்களில் விளையாடி 28 கோல்கள் அடித்துள்ளார்.

1 More update

Next Story