இந்திய கால்பந்து அணிக்கு ரூ 16. லட்சம் சம்பளத்தில் ஜோதிடர் நியமனம்...!


இந்திய கால்பந்து அணிக்கு ரூ 16. லட்சம் சம்பளத்தில் ஜோதிடர் நியமனம்...!
x

சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழு, அகில இந்திய கால்பந்து சம்மேளன உயர் அதிகாரி ஒருவரிடம் ஜோதிட நிறுவனம் நியமனம் செய்வதன் காரணம் குறித்து கேள்வி எழுப்பியபோது இது வெளிச்சத்திற்கு வந்தது.

புதுடெல்லி

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்தியா சிறப்பாக ஆடி பிரதான ஆசியக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. ஜோதிடர்களின் ஊக்குவித்ததுதான் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

இதுதொடர்பாக கால்பந்து அணியின் நிர்வாகி ஒருவர் பிடிஐ-செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ஆசியக் கோப்பை கால்பந்து அணிக்கு மோட்டிவேட்டர் நியமிக்கப்பட்டுள்ளார். பின்னர்தான் தெரிந்தது அது ஜோதிட நிறுவனம் என்று" என்றார்.

அகில இந்திய கால்பந்து சம்மேளனம் இந்த மாத ஏஎஃப்சி ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக முக்கிய சுற்றுக்கு வருவதை உறுதி செய்வதற்காக மூன்று மாத ஒப்பந்தத்தில் தெற்கு டெல்லியில் இருந்து ஒரு ஜோதிட நிறுவனத்தை நியமித்தது.

சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழு, அகில இந்திய கால்பந்து சம்மேளன உயர் அதிகாரி ஒருவரிடம் ஜோதிட நிறுவனத்தில் ஈடுபடுவதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பியபோது இது வெளிச்சத்திற்கு வந்தது.

வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்க ரூ.16 லட்சம் சம்பளத்தில் ஜோதிட நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய கேலிக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

இந்தியக் கால்பந்தில் ஜோசிடம் ஒன்றும் புதியது இல்லை. ஒருமுறை டெல்லியில் உள்ள கால்பந்து கிளப் 'பாபா' என்ற ஒருவரை நியமித்தது. போட்டியில் வென்ற பிறகு அவரால்தான் போட்டியை வென்றதாகக் கூறியதும் நடந்தேறியது.

சுனில் சேத்ரி, 3 போட்டிகளில் 4 கோல்கள் அடித்து இந்தியாவின் சிறந்த ஆசியக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டியாக மாற்றியதுகூட இப்போது ஜோதிடர் ஆசீர்வாதத்தினால் என்று பேசப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கால்பந்து ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

முன்னாள் இந்திய கோல் கீப்பர் தனுமாய் போஸ் கூறுகையில், இதன் மூலம் இந்திய கால்பந்து கூட்டமைப்பு உலக அரங்கில் பெரிய அளவில் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. இந்த ஜோதிடம் எல்லாம் ஒரு திரைதான். நிர்வாகிகள் தங்கள் வெளிநாட்டு சொகுசுப் பயணத்துக்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார்.


Next Story