சாம்பியன்ஸ் லீக் கால்பந்து - ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி இறுதிப்போட்டிக்கு தகுதி


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து - ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 18 May 2023 9:39 AM GMT (Updated: 18 May 2023 9:39 AM GMT)

ஆட்ட நேர முடிவில் 4-0 என மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெற்றது.

மான்செஸ்டர் ,

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடந்த அரைஇறுதியின் 2-வது சுற்று போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து)- ரியல் மாட்ரிட் ( ஸ்பெயின் ) அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய மான்செஸ்டர் அணி முதல் பாதியில் 2 கோல்கள் அடித்தது. அந்த அணியின் பெர்னார்டோ சில்வா 23 மற்றும் 378வது நிமிடத்தில் கோல் அடித்தார்.பின்னர் நடைபெற்ற 2வது பாதியில் 76 மற்றும் 90வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணி கோல் அடித்தது.

இதனால் ஆட்ட நேர முடிவில் 4-0 என மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெற்றது.

இவ்விரு அணிகள் ஏற்கனவே மோதிய அரைஇறுதியின் முதலாவது சுற்றில் இரு அணிகளும் 1-1 என சம நிலையில் போட்டி முடிந்தது.

இரு ஆட்டங்களின் முடிவையும் சேர்த்து மான்செஸ்டர் சிட்டி 5-1 என்ற கணக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டியில் இன்டெர் மிலான் அணியுடன் மான்செஸ்டர் சிட்டி மோதுகிறது.


Next Story