மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறுகிறாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ ? - ரசிகர்கள் அதிர்ச்சி


மான்செஸ்டர் யுனைடெட் அணியில்   இருந்து வெளியேறுகிறாரா  கிறிஸ்டியானோ ரொனால்டோ ? - ரசிகர்கள் அதிர்ச்சி
x

Image Courtesy : AFP 

தினத்தந்தி 3 July 2022 10:30 AM GMT (Updated: 3 July 2022 10:31 AM GMT)

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்பில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேற விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது.இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003-ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் விளையாடினார்.

பின்னர் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட் ரொனால்டோ , 2018-ம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிய அவர், கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணியில் இணைந்தார்.

இந்த நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்பில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேற விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவலால் மான்செஸ்டர் அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story