பிபா உலக கோப்பை 2026 தகுதி சுற்று கால்பந்து போட்டிகள்; இந்திய அணி வெற்றி


பிபா உலக கோப்பை 2026 தகுதி சுற்று கால்பந்து போட்டிகள்; இந்திய அணி வெற்றி
x

போட்டியில் இந்திய அணியை சேர்ந்த மன்வீர் சிங் 75-வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

குவைத் நகரம்,

குவைத்தில் உள்ள குவைத் நகரத்தில் பிபா உலக கோப்பை 2026 தகுதி சுற்று கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், குரூப் ஏ பிரிவில் 2-வது சுற்று போட்டி ஒன்றில், இந்தியா மற்றும் குவைத் அணிகள் விளையாடின.

போட்டியில் இந்திய அணியை சேர்ந்த மன்வீர் சிங் 75-வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார். இதன்பின் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இந்திய அணியின் தடுப்பு ஆட்டம் சிறப்பாக அமைந்தது. எதிரணியினர் கோல் அடிக்க முடியாமல் திணறினார்கள். இதனால், 1-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

அடுத்து, வருகிற 21-ந்தேதி நடைபெறும் போட்டி ஒன்றில் கத்தார் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடும். குரூப் ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான் அணியும் இடம் பெற்றுள்ளது.

இந்த 4 அணிகளும் ரவுண்டு ராபின் முறையில் ஒன்றுடன் ஒன்று விளையாடும். டாப்-2 ஆக வரும் அணிகள் பிபா உலக கோப்பை 2026 ஏ.எப்.சி. 3-வது சுற்றுக்கு செல்வதுடன், 2027 ஏ.எப்.சி. ஆசிய கோப்பைக்கான போட்டியில் நேரடி தகுதி பெறும்.


Next Story