சர்வதேச கால்பந்து சங்க அணிகளின் தரவரிசை பட்டியல் - அர்ஜென்டினா முதலிடம்


சர்வதேச கால்பந்து சங்க அணிகளின் தரவரிசை பட்டியல் - அர்ஜென்டினா முதலிடம்
x

5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி இரண்டு இடம் சறுக்கி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

ஷூரிச்,

சர்வதேச கால்பந்து சங்கம் அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் அர்ஜென்டினா அணி ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. 36 ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்த அர்ஜென்டினா அணி சமீபத்தில் நட்புறவு ஆட்டங்களில் பனாமா, குராசாவ் ஆகிய நாடுகளை தோற்கடித்ததன் மூலம் 6 ஆண்டுக்கு பிறகு 'நம்பர் ஒன்' அரியணையில் அமர்ந்துள்ளது.

இதுவரை முதலிடத்தில் இருந்த 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, கடந்த மாதம் மொராக்கோவுக்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் 1-2 என்ற கணக்கில் தோற்றதன் மூலம் இரு இடம் சறுக்கி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பிரான்ஸ் ஒரு இடம் ஏற்றம் கண்டு 2-வது இடத்தை பிடித்துள்ளது. பெல்ஜியம் 4-வது இடத்திலும், இங்கிலாந்து 5-வது இடத்திலும் நீடிக்கிறது. கிறிஸ்டியானா ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் 9-வது இடம் வகிக்கிறது.

அண்மையில் மணிப்பூரில் நடந்த முத்தரப்பு கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணி 5 இடங்கள் உயர்ந்து 101-வது இடத்தை பெற்றுள்ளது.


Next Story