கால்பந்து போட்டியில் கலக்கல்: தமிழ்நாடு ஆண், பெண் போலீஸ் அணிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு


கால்பந்து போட்டியில் கலக்கல்: தமிழ்நாடு ஆண், பெண் போலீஸ் அணிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு
x

தமிழ்நாடு போலீஸ் கால்பந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினரை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் வரவழைத்து பாராட்டினார்.

சென்னை,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ராணுவ மைதானத்தில் போலீஸ் அணிகளுக்கு இடையே கடந்த மாதம் 25-ந்தேதி முதல் கடந்த 4-ந்தேதி வரை கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மும்பை, நாக்பூர், ஜதராபாத், பஞ்சாப் உள்பட 12 போலீஸ் அணிகள் பங்கேற்றன.

இதன் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு போலீஸ் ஆண்கள் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் போலீஸ் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது. தமிழ்நாடு அணியில் செல்வகுமார் (சிறந்த கோல் கீப்பர்), எம்.விஜயன் (சிறந்த தற்காப்பு ஆட்டக்காரர்) கணேச மூர்த்தி (சிறந்த முன்கள வீரர்) ஆகியோருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு அணிக்கு ரூ.1½ லட்சம் ரொக்க பரிசு அளிக்கப்பட்டது.

மறைந்த கால்பந்து வீராங்கணை பிரியா நினைவாக சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் தமிழ்நாடு போலீஸ் பெண்கள் அணி 2-வது இடம் பிடித்தது. பெண்கள் அணிக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற தமிழ்நாடு போலீஸ் கால்பந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினரை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் வரவழைத்து பாராட்டினார். அப்போது தமிழ்நாடு போலீஸ் கால்பந்து அணியின் புரவலரும், சென்னை போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனருமான கபில்குமார் சி சராத்கர் உடனிருந்தார்.


Next Story