ஐ.எஸ்.எல் கால்பந்து : அலெக்ஸ் சாஜி-யை ஒப்பந்தம் செய்த ஐதராபாத் அணி


ஐ.எஸ்.எல் கால்பந்து : அலெக்ஸ் சாஜி-யை ஒப்பந்தம் செய்த ஐதராபாத் அணி
x

Image Courtesy : @HydFCOfficial

ஐதராபாத் அணி அலெக்ஸ் சாஜி-யை 2024- 2025 சீசன் வரை தங்கள் அணியில் ஒப்பந்தம் செய்துள்ளது

ஐதராபாத்,

இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. குறிப்பாக கேரளா பிளாஸ்டர்ஸ், சென்னையின் எப்.சி அணிகள் சமீப நாட்களாக வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஐதராபாத் எப்சிஅணி இந்திய டிபென்டர் அலெக்ஸ் சாஜியை இன்று ஒப்பந்தம் செய்துள்ளது. 22 வயதான இவர் 26 ஐ - லீக் கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக உள்நாட்டு போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்த இவரை ஐதராபாத் அணி 2024- 2025 சீசன் வரை தங்கள் அணியில் ஒப்பந்தம் செய்துள்ளது. அவருக்கு இது முதல் ஐ.எஸ்.எல் தொடராகும்.

ஐதராபாத் எஃப்சி அணியில் இணைந்தது பற்றி அலெக்ஸ் சாஜி கூறியதாவது :

ஐதராபாத் எப்சி, நாட்டில் உள்ள இளம் வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கும் அணியாகும், மேலும் இந்த கிளப்பில் ஒரு அங்கமாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்னைப் போன்ற ஒரு வீரருக்கு இது ஒரு சிறந்த தளம். இது ஒரு உற்சாகமான சீசனாக இருக்கும், ஐ.எஸ்.எல்-ல் என்னுடைய முதல் போட்டியை விளையாட ஆவலாக காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story