நவம்பர் 12-ல் தொடங்குகிறது ஐ-லீக் கால்பந்து போட்டிகள்


நவம்பர் 12-ல் தொடங்குகிறது ஐ-லீக் கால்பந்து போட்டிகள்
x

Image Tweeted By @ILeagueOfficial

ஐ-லீக் கால்பந்தின் 2022-2023 சீசன் நவம்பர் 12-ஆம் தேதி தொடங்கும் என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் உள்நாட்டு கால்பந்து தொடரான ஐ-லீக் கால்பந்தின் 2022-2023 சீசன் நவம்பர் 12-ஆம் தேதி தொடங்குகிறது. கேரளாவின் மலப்புரத்தில் நவம்பர் 12 ஆம் தேதி இந்த தொடர் தொடங்கும் என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

12 அணிகள் பங்கேற்கும் ஐ-லீக் கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கோகுலம் கேரளா எப்சியும், கடந்த சீசனில் இரண்டாம் இடம் பிடித்த முகமதின் ஸ்போர்ட்டிங் அணியும் (கொல்கத்தா) மோதுகின்றன.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு சீசன்களின் அனைத்து போட்டிகளும் மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற்ற நிலையில் தற்போது 12 அணிகளும் நாடு முழுவதும் உள்ள 13 மைதானங்களில் விளையாட உள்ளன.

1 More update

Next Story