'உலக கோப்பையை வென்றால் ஓய்வு பெறுவேன்' - கிறிஸ்டியானோ ரொனால்டோ பேட்டி


உலக கோப்பையை வென்றால் ஓய்வு பெறுவேன் - கிறிஸ்டியானோ ரொனால்டோ பேட்டி
x

உலக கோப்பையை வென்றால் ஓய்வு பெறுவேன் என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

போர்ச்சுகல்,

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இதுவரை 191 ஆட்டங்களில் விளையாடி 117 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்தவர் இவர் தான். கத்தாரில் நாளை தொடங்கும் உலக கோப்பை கால்பந்து தொடருக்கு ஆயத்தமாகி வரும் 37 வயதான ரொனால்டோவுக்கு இது 5-வது உலக கோப்பையாகும்.

இந்த நிலையில் ரொனால்டோ அளித்த ஒரு பேட்டியில், 'அனேகமாக இது தான் எனது கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கும். அதிகபட்சமாக இன்னும் 2-3 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவேன். எனது 40-வது வயதில் கால்பந்து வாழ்க்கையை நிறைவு செய்ய விரும்புகிறேன். 40 நல்ல வயது என்று நினைக்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் என்ன செய்வேன் என்பது தெரியாது' என்றார்.

'கத்தார் உலக கோப்பையின் இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல்- அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. நீங்களும் (ரொனால்டோ) மெஸ்சியும் தலா 2 கோல் அடித்து இருக்கிறீர்கள். 94-வது நிமிடத்தில் நீங்கள் மீண்டும் அடிக்கும் கோலுடன் கோப்பை போர்ச்சுல் வசம் ஆகிறது.

அப்போது உங்களது மனநிலை எப்படி இருக்கும்' என்று ரொனால்டோவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், 'அவ்வாறு நடந்தால் களத்தில் மிகவும் மகிழ்ச்சிகரமான மனிதராக நான் இருப்பேன். அத்துடன் எனது கால்பந்து வாழ்க்கையை முடித்து ஓய்வு பெற்று விடுவேன்.' என்றார்.


Next Story