ஆசிய விளையாட்டுக்கான இந்திய கால்பந்து அணி அறிவிப்பு: தமிழக வீரர் சிவசக்திக்கு இடம்


ஆசிய விளையாட்டுக்கான இந்திய கால்பந்து அணி அறிவிப்பு: தமிழக வீரர் சிவசக்திக்கு இடம்
x

தமிழக வீரர் காரைக்குடியைச் சேர்ந்த சிவசக்தி நாராணயனுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

புதுடெல்லி, -

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய கால்பந்து அணி தரவரிசையில் பின்தங்கி இருப்பதால் அதை காரணம் காட்டி கலந்து கொள்ள முதலில் அனுமதி அளிக்கப்படவில்லை. பிறகு பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று விதிமுறைகளை தளர்த்தி கால்பந்து அணிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் 'பச்சைக்கொடி' காட்டியது.

இந்த போட்டிக்கான 22 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆசிய விளையாட்டுக்கான அணியில் 23 வயதுக்கு மேற்பட்ட வீரர்களில் 3 பேரை மட்டுமே சேர்க்க அனுமதி உண்டு. அந்த வகையில் மூத்த வீரர்கள் சுனில் சேத்ரி, சந்தேஷ் ஜின்கான், கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து தேர்வாகி உள்ளனர். தமிழக வீரர் காரைக்குடியைச் சேர்ந்த சிவசக்தி நாராணயனுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. 22 வயதான சிவசக்தி ஐ.எஸ்.எல். கால்பந்தில் பெங்களூரு எப்.சி.க்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வருமாறு: கோல் கீப்பர்கள்: குர்பிரீத் சிங் சந்து, குர்மீத் சிங், தீரஜ் சிங், பின்களம்: சந்தேஷ் ஜின்கான், அன்வர் அலி, நரேந்தர் கெலாட், லால்சங்னுங்கா, ஆகாஷ் மிஸ்ரா, ரோஷன் சிங், ஆஷிஷ் ராய், நடுகளம்: ஜியாக்சன் சிங் தோனாவ்ஜாம், சுரேஷ் சிங், அபியா ரால்ட், அமர்ஜித் சிங் கியாம், ராகுல் கே.பி., நாவ்ரிம் மகேஷ் சிங்,, முன்களம்: சிவசக்தி நாராயணன், ரஹிம் அலி, சுனில் சேத்ரி, அனிகெட் ஜாதவ், விக்ரம் பிரதாப் சிங், ரோகித் தானு.


Next Story