ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி ஏ.டி.கே மோகன் பகான் வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி ஏ.டி.கே மோகன் பகான் வெற்றி
x

image courtesy: ATK Mohun Bagan FC twitter

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் பெங்கால்-ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் மோதின.

கொல்கத்தா,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஏற்கனவே, பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட ஈஸ்ட் பெங்கால் அணி தனது கடைசி லீக் போட்டியில் ஏ.டி.கே மோகன் பகான் அணியுடன் மோதியது.

இந்த போட்டியில், ஏ.டி.கே மோகன் பகான் அணி சார்பில் ஸ்லாவ்கோ டம்ஜனோவிக், ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். திமித்ரி பெட்ராடோஸ் ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஈஸ்ட் பெங்கால் அணி எந்த கோலும் அடிக்கவில்லை.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் ஏ.டி.கே மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளை நடைபெற உள்ள லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.


Next Story