ஐ.எஸ்.எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது மோகன் பகான்


ஐ.எஸ்.எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது மோகன் பகான்
x

Image Tweeted By IndSuperLeague

நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி பெற்றது.

ஜாம்ஷெட்பூர்,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்- ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மோகன் பகான் வீரர் லிஸ்டோன் அந்த அணியின் முதல் கோலை அடித்தார். இதற்கு பதிலடியாக 81-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் வீரர் எவன்ஸ் கோல் அடித்தார். பரபரப்பான கடைசி கட்டத்தில் சுபாசிஸ் போஸ் (89-வது நிமிடம்) மோகன் பகான் அணிக்காக 2-வது கோலை அடித்தார்.

இதையடுத்து ஆட்ட நேர முடிவில் மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story