ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பை சிட்டியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பை சிட்டியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

பெங்களூருவில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி-பெங்களூரு எப்.சி அணிகள் மோதின.

பெங்களூரு,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி-பெங்களூரு எப்.சி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பில் சுனில் ஆட்டத்தின் 57-வது நிமிடத்திலும் ஜாவி ஆட்டத்தின் 70-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். மும்பை சிட்டி அணி சார்பில் மோர்டாடா ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் பெங்களூரு எப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story