ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால்-பஞ்சாப் எப்.சி ஆட்டம் டிரா


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால்-பஞ்சாப் எப்.சி ஆட்டம் டிரா
x

image courtesy: Indian Super League twitter

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - பஞ்சாப் எப்.சி அணிகள் மோதின.

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-பஞ்சாப் எப்.சி அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஆட்டநேர முடிவில் இரண்டு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஈஸ்ட் பெங்கால்-பஞ்சாப் எப்.சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


Next Story