ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி கோவா வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி கோவா வெற்றி
x

புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் பெங்கால்-எப்.சி. கோவா அணிகள் மோதின.

புவனேஸ்வர்,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் பெங்கால்-எப்.சி. கோவா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் நாரோம் மகேஷ் சிங் ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். கோவா அணி சார்பில் சந்தேஷ் ஜின்கன் 74-வது நிமிடத்திலும், விக்டர் 75-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story